கடலூர் அருகே காட்டுமன்னார்கோவிலில் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி தண்ணில மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே கிழக்கடம்பூர் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உடையார் தெரு என்ற பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கிராமத்தில் 600 மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு தமிழக அரசின் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஏழ்மைநிலையில் உள்ள மக்கள் உண்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் சுண்ணாம்பு கட்டி போன்ற அடர் வெள்ளை நிறத்தில் வழங்கபட்ட அரிசி இருந்துள்ளது.
இந்த நிலையில் இந்த அரிசியைச் சமைக்க பயன்படுத்தும் போது அதில் சில அரிசிகள் தண்ணீரில் மிதந்துள்ளனர்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் இது குறித்து நியாயவிலைக்கடை கடை ஊழியர்களிடம் கேட்ட போது இந்த விஷயம் பூதாகரமானது.
இதற்கிடையே காட்டுமன்னார் கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனுக்கும் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்,நியாயவிலைக்கடை கடையில் முட்டையில் வைக்கப்பட்டுள்ள அரிசிகளைச் சோதனை செய்து அதைச் சாப்பிட்டும் பார்த்தார்.
மேலும் இது குறித்து விளக்கம் அளித்த அவர் பொது வினியோக கடையில் வழங்கப் பட்ட அரிசியில் அடர் வெள்ளை நிறத்திலான அரிசியானது செறிவூட்டப்பட்ட அரிசி என்றும் இதனால் பாதிப்பு இல்லை எனவும் உடல் நலத்திற்கு நல்லது எனவும்,பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை எனவும் வட்டாட்சியர் எடுத்துரைத்தார்.
பொது மக்கள் தங்களது குறை கூறியவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களின் அச்சத்தைப் போக்கிய வட்டாட்சியருக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்