“சஹானா சாரல் தூவுதோ” பாலிவுட் பின்னணி பாடகர் உதித் நாராயண் பிறந்த நாள் இன்று
பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயண் டிசம்பர் 1, 1955 ஆம் ஆண்டு பிறந்தார். 1980 இல் பாலிவுட் பின்னணியில் அறிமுகமான இவர், சிறப்பான இடத்தினைப் பெற நிறைய போராட வேண்டியிருந்தது. 1980 ஆம் ஆண்டில் யுனீஸ்-பீஸ் திரைப்படத்தில் பாலிவுட் பின்னணிப் பாடகர்களான முகமது ரஃபி மற்றும் 1980 களில் கிஷோர் குமார் ஆகியோருடன் அவர் பாடினார்.
இவரது பாடல்கள் முக்கியமாக இந்தி மொழியின் பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இந்தி மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, நேபாளி, போஜ்புரி மற்றும் பல மொழிகளில் பல பாடல்களை பாடி உள்ளார்.
அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த், அமீர்கான், ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்காக அவர் பின்னணி பாடியுள்ளார்.

குறிப்பாக தமிழில் இவர் பாடிய “சஹானா சாரல் தூவுதோ” என்ற பாடல் மெய் மறந்துகேட்கத் தோன்றும். நடிகர் ரஜினிகாந்த் – ஸ்ரேயா சரண் நடிப்பில் வெளிவந்த சிவாஜி என்ற படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த பாடலை சின்மாயி உடன் இணைந்து, உதித் நாராயண் பாடி இருப்பார். “சோனியா சோனியா”, மீனம்மா மீனம்மா மீனு வாங்க போலாமா” போன்ற பல 90s கிட்ஸ்களின் பேவரட் பாடல்களை பாடி உள்ளார்.
மூன்று தேசிய விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ள உதித் நாராயண்இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.