நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மேலும் மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதைத் தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. இதன் தொடர்ச்சியாக பள்ளிகளும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டன., இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் பிப். 1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து பள்ளிகளும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகளை நடத்துகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மேலும் மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வருவதைத் தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் உடனே ஆசிரியரிடம் சொல்ல வேண்டும் என தெரிவித்த என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இதனிடையில் இடவசதி இல்லாத பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.