நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலாப் பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் நேற்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது .
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த திருமதி.முப்புடாதி (வயது 67), திரு.முருகேசன் (வயது 65), திரு. இளங்கோ (வயது 64), திருமதி.தேவிகலா (வயது 42), திருமதி.கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி வேதனை அளிக்கிறது.
என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உதவித் தொகையாக இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுகு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.