பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர இருப்பதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் (PM IN TN) விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று மாலை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.
முதலாவதாக சென்னைக்கு வரும் பிரதமர் மோடி சென்னையில் முதல் முறையாக நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார்.
நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் ஓய்வெடுக்கும் பிரமர் மோடி மறுநாள் காலை 20ஆம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி மாநகரத்திற்கு செல்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக புறப்பட்டு ஹெலிபேட் உள்ள இடத்திற்கு வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதிக்கு பிரதமர் மோடி செல்கிறார்
இதையடுத்து கோதண்டராமர் சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார்
Also Read : https://itamiltv.com/arrest-mla-karunanidhi-daughter-in-law-and-son/
அதன் பின்னர் , அரிச்சல் முனை பகுதிக்கும் செல்லும் பிரதமர் மோடி அங்கு சில நிமிடம் உள்ளார்
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருகை தர இருப்பதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகையை ஒட்டி, ராமநாதசுவாமி கோயிலில் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
(PM IN TN) நாளை நண்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் நண்பகல் வரை அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தமிழகத்தில் கால் வைத்து மீண்டும் டெல்லிக்கு புறப்படும் வரை எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏரளமான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.