Moscow terror attack ரஷ்யாவில் மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவின் மேற்கு பகுதியில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் இசை அரங்கு ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இங்கு 6ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி இசைநிகழ்ச்சியை கண்டு கொண்டிருந்துள்ளனர். இதில் கிறிஸ்தவர்களும் திரளாகப் பங்கேற்று இசையை ரசித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இசை அரங்குக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென, அங்கிருந்தவர்கள் மீது தாங்கள் கொண்டு வந்த உயர்ரக துப்பாக்கியால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர். எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த திடீர் நிகழ்வால் உள்ளே இருந்த ஆண்களும், பெண்களும் அலறியடித்து உயிரைக் காத்துக் கொள்ள ஓடியுள்ளனர்.
Also Read : தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு; பலியான 60 உயிர்கள் – அதிர்ந்து போன ரஷ்யா
கூட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துச் சென்றதிலும் துப்பாக்கியால் சுடப்பட்டதிலும் 115 பேர் பலியாகி இருப்பதாகவும், 145 க்கும் மேற்பட்டோர் தற்பொழுது வரை காயமடைந்து உள்ளதாகவும் ரஷிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவின் மிகப்பெரிய அரங்கமான 6000 பேர் வரை பங்கேற்ற இந்த இசைக் கச்சேரியில் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலினால், அரங்கு முழுவதும் தீக்கிரையாகியது. இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Also Read : Article | தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு; – அதிர்ந்து போன ரஷ்யா
இந்த நிலையில்Moscow terror attack ரஷ்யாவில் மாஸ்கோவின் குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா துணையாக நிற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.