நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை இந்தியாவில் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி(pm modi) அறிவித்தார்.
தென்னாப்ரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்ற பிரதமர் மோடி( pm modi)இன்று காலை பெங்களூரு திரும்பினார்.இந்த நிலையில் ,இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெங்களூரு வந்தடைந்த பிரதமர் மோடியை பெங்களூரு கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கண்ட்ரோல் வளாகத்தில் அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.
அங்கு இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.அப்போது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது தாம் தென்னாப்ரிக்காவில் இருந்து கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 நாளான ஆகஸ்ட் 23 ஆம் தேதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
மேலும் விக்ரம் லேண்டர் மெதுவாகத் தொட்ட இடம் ‘சிவசக்தி’ என்று குறிப்பிடப்படும் என்று அவர் அறிவித்தார், அதே நேரத்தில் சந்திரயான் 2 துரதிர்ஷ்டவசமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய இடமானது ‘திரங்கா’ என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.