மூன்றாவது முறையாக நான் பிரதமராக தேர்வாகும்போது, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என பிரதமர் மோடி (pm modi) சூளுரைத்துள்ளார்.
டெல்லியில் ஜி20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.இதற்கு 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவில் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் கட்டடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 3-வது தளத்தில் 7 ஆயிரம் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட அரங்க கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்திற்கு பாரத் மண்டபம் என பெயர் வைக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தாம் முதன்முறை ஆட்சி அமைக்கும்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்ததை சுட்டிக் காட்டினார்.
தான் 2 முறை பிரதமராக பதவியேற்ற போது ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தாம் மீண்டும் ஆட்சியமைக்கும்போது, இந்தியாவை 3வது இடத்திற்கு கொண்டு செல்வேன் என தெரிவித்தார்.