அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை ( mano thangaraj ) எடுக்கவில்லை என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் பிரதமர் மோடியின் ஒப்புதல் வாக்குமூலம் !!
Also Read : வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சாம் பிட்ரோடா – பதவியை பறித்த கார்கே..!!
அதானி, அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் எவ்வளவு கறுப்புப் பணத்தை பெற்றது என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி, அம்பானியிடம் கருப்பு பணம் இருப்பது தெரிந்தும் அதை மீட்க பிரதமர் மோடி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எல்லாம் எதிர்கட்சிகளுக்கு மட்டும் தான் ( mano thangaraj ) அதானி, அம்பானிக்கு பொருந்தாது என இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.