International Women’s Day | உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இன்று (08.03.24) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மம்தா, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “அன்னை தெரசா போட்டோவாலேயே” KPY பாலா படத்தை வரைந்த ஓவிய ஆசிரியர்!
இதன் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமையை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்.. மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமையல் எரிவாயுவை மிகவும் குறைந்த விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1766012031231242394?s=20
இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதான வாழ்வியல் சூழல் என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் விலை குறைப்பு அறிவிப்பை முன்னிட்டு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.