பிரதமர் நரேந்திர மோடியின் தம்பியும், அகில இந்திய நியாய விலைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான பிரஹலாத் மோடி, உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளார்.
பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி. இவர் ஹீராபென் தாமோதர தாஸ் ஆகியோருக்கு பிறந்த நான்காவது பிள்ளை ஆவார். பிரதமரின் சகோதரராக இருந்தாலும் நியாயவிலைக்கடை கடையில் பணியாற்ற பிரஹலாத் மோடி கடந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இளைய சகோதரராக இருந்தாலும் பிரதமர் மோடி அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தி உள்ளார் பிரஹலாத் மோடி.
இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது மனைவி மகள் மகன் மற்றும் மருமகளுடன் வாகனத்தில் மைசூர் மாவட்டம் பந்திப்பூராவில் சென்ற பொழுது சாலை விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றன.
இந்த நிலையில் பிரஹலாத் மோடிக்குச் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீன் கிரீன்விச் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தலைசிறந்த மருத்துவர்கள் பிரகலாதா மோடிக்குச் சிகிச்சை அளிக்க மேற்கொள்ளப்படுவார்கள் என்றுகூறப்படுகிறது.
பிரஹலாத் மோடியும் அவரது தாயாரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் ஹீராபென் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்த நிலைகள் பிரஹலாத் மோடி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ற்படுத்தியுள்ளது உள்ளது.