அமெரிக்க சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸில் இன்று உரையாற்ற உள்ளார்.
கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல்முறை அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விமானம் மூலம் புறப்பட்டார்.நியூயார்க்கில் எலான் மஸ்க் , நோபல் பரிசு பெற்றவர்கள்,பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்களை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் நேற்று சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.இதுதவிர பிரதமர் மோடி தொழிலதிபர்கள், இந்திய வம்சாவளியினர், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்டோரை அமெரிக்காவில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த நிலையில் இன்றுவெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் பைடன் சிறப்பான வரவேற்பு அளித்தார்.வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் அதிபர் பைடன் வரவேற்றனர்.
அதிபர் ஜோ பைடனுடனான பிரதமர் மோடியின் சந்திப்பில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்.மேலும் இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு வருகை தரும்போது, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடியை உரையாற்றுமாறு அமெரிக்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார்.