pmk- bjp alliance தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாமக – பாஜக இடையிலான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிறுவனர் ராமதாஸ் ,தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வடக்கு மண்டல இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி,வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “இதுக்குத்தாங்க பாமகவோட கூட்டணி..!” – அண்ணாமலை சொன்ன ‘அடடே’ காரணம்!
அதன் பிறகு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த ஆலோசனையில் முடிவில் பாஜக – பாமக மக்களவைத் தேர்தலில் கூட்டணிpmk- bjp alliance அமைப்பதற்காக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
அதில், பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தவும், தேசத்தின் நலன் காக்கவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று, நமது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுடன், தைலாபுரம் இல்லத்திற்குச் சென்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணியையும், நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்தோம்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களுக்கான உரிமைக்காகக் குரல் கொடுத்து ராமதாஸ், வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர வேண்டும் என்று, தேச நலன் சார்ந்து முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.