மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி (Alliance) உறுதி..
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து கட்சிகளும் கூட்டணி (Alliance) பேச்சுவார்த்தை பணிகளில் இறங்கி உள்ளன.
இந்த நிலையில், சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : Demonstration : திமுக அரசை கண்டித்து செல்லூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம்!
அந்த கூட்டத்தில், வருகிற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட பா.ம.க. முடிவு செய்துள்ளது.
அதன்படி, எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியில்லை என பா.ம.க. திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!
பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கும், தமிழர்கள் தங்களின் வீரத்தின் அடையாளமாகவும்,
பண்பாட்டுச் சின்னமாகவும் கருதிய ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தடைசெய்யப்பட்டது ஆகிய அனைத்திற்கும் மாநிலப்பட்டியலில் இருந்த 5 பொருட்கள் மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது தான் காரணம்.
இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டியது மாநிலக் கட்சிகளின் கடமை. அந்தக் கடமையை பா.ம.க. மிகச்சரியாக நிறைவேற்றி வருகிறது.
பா.ம.க. தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்துப் போட்டியிட நாம் இப்போது தயாராக இல்லை.
தற்போதைய சூழலில் கூட்டணி அமைத்தே பா.ம.க. போட்டியிடும். அந்த வகையில், மாநில நலன், தேசிய நலன், மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் குறைந்தது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.
12 தொகுதிகளை அடையாளம் கண்டு பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.