பலவேறு திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாட்கள் (PMTN) சுற்றுப் பயணமாக இன்று பிற்பகல் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையடுத்து நாளை நாளை தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் பிரதமர் மோடியின் 2 நாட்கள் பயண திட்டம் குறித்த விவரங்கள் :
பிரதமரின் இன்றைய பயண திட்டம் :
மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்.
மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பல்லடம் செல்கிறார்.
2.45 முதல், 3.45 வரை என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்கிறார்.
மாலை 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மதுரைக்கு செல்கிறார் .
இதையடுத்து 5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார் .
பின்னர் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார் .
பிரதமரின் நாளைய பயண திட்டம் :
28- 02-24 காலை 8.15 மணிக்கு தான் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார் பிரதமர் மோடி
மதுரை விமான நிலையித்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார்.
Also Read : https://itamiltv.com/imaginary-news-publishing-media/
9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் (PMTN) பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
இதை தொடர்ந்து 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, திருநெல்வேலி செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.