கடலூரில் போக்குவரத்து போலீசார் பாரபட்சம் காட்டுவதாகவும் ஹெல்மெட் அணியாத காவலருக்கு வழக்கு பதிவதில்லை, பொதுமக்களுக்கு உடனடி வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிப்பதாகவும் வாகன ஒட்டி ஒருவர் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் பீச் ரோடு சிக்னலில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது ஒரு வாகனத்தை பிடித்து ஹெல்மெட் அணியவில்லை என வழக்கு பதிவு செய்ததாக தெரிய வருகிறது.
அப்போது காவலர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்து வாகனங்களை வழி மறக்கும் காவலரிடம் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அந்த வாகன ஒட்டி காவலர் தானே அவர் ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்.
அவருக்கு ஏன் நீங்கள் வழக்குப்பதியவில்லை என காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாரிடம் கேள்வி கேட்டார். மேலும் அந்த காவலர் மீது வழக்கு பதிவு செய்தால் நான் அபராதம் செலுத்துகிறேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு வாய் பேசாமல் திகைத்து நின்ற காவலரிடம் மீண்டும் ஒருமையில் அந்த நபர் கேள்வி எழுப்ப வாயா போயா என பேசினால் அடித்து நொறுக்கி விடுவேன் என ஒருமையில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.