அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம் என ( election commission ) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொதுமக்களை அனைவரும் வெளியில் செல்ல முடியாமலும் தங்களது அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் திறந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் ரிசல்ட் வரும் வரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் உள்ளது.
Also Read : வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு – காவல்துறை விளக்கம்
தேர்தல் ஆணையத்தின் அனுமதி இல்லாமல் அரசியல் காட்சிகள் எந்த ஒரு பொது சேவையும் செய்யமுடியாத சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில் :
தண்ணீர் பந்தல் திறப்பின் மூலமாக அரசியல் கட்சிகள், வேட்பாளர் எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது.
தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும்.
சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களையும் கடைபிடிக்க வேண்டும்
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ( election commission ) அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.