லோகேஷ் மற்றும் ரஜினியின் காம்போவில் உருவாகி வரும் கூலி படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இன்றிற்கு ( coolie ) இசைஞானி இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தான் ‘கூலி’ . ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தின் டைட்டில் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் இந்த டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Also Read : அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம்..!!
கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற “வா வா பாக்கம் வா” பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இளையராஜாவின் இந்த கோபத்தை படக்குழு தனிக்குமா அல்லது எதுவாக இருந்தாலும் ( coolie ) கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம் என அடுத்தகட்ட நகர்வை கையில் எடுக்குமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.