சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் இனி ராகுல் காந்தி சாலையில் நடமாடவே முடியாது என எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மோடி குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்தானது அவரதுஅரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு உள்ளது.
மோடி சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில்,தனது தகுதி நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஒரு முறை அல்ல என்னை நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப் போவதில்லை.
மன்னிப்பு கேட்பதற்கு நான் ஒண்ணும் சாவர்க்கர் அல்ல.. நான் காந்தி என்று கூறியுள்ளார். நான் பேசுவதைக் கண்டு அமைச்சர் மோடி பயப்படுகிறார்.
நாடாளுமன்றத்தில் அதானி நான் பேசிய பொழுது பிரதமர் மோடி கண்ணில் நான் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தைத் திசை திருப்புவதற்கான நடவடிக்கையை இது.
மேலும் எனக்கு உண்மையைப் பேசவே விருப்பம் உள்ளது. அதனைத் தொடர்வேன் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி பேசியதற்கு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டடபேரவையில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, சாவர்க்கர் மகாராஷ்டிரவிற்க்கு மட்டும் தெய்வம் அல்ல ..நமது நாட்டிற்கே தெய்வம். ஆனால் சாவர்க்கரை அவதூறாக பேசியுள்ளார்.
மேலும் அவர் ஓபிசி சமூகத்தை அவர் அவமதித்து உள்ளார். ராகுல் காந்தி இது போன்று தொடர்ந்து அவர் பேசிக் கொண்டிருந்தால் சாலையில் நடமாடுவது கடினம் எனச் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.