2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியானதையடுத்து டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில் டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்க தடை இல்லை என்றும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாங்கக் கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசின் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களுடைய 2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக் கடைகளில் வாங்கக் கூடாது என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகளில் வெளியானது. எக்காரணத்தைக் கொண்டும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கக்கூடாது என்ற மது பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கிகளில் மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பொறுப்பில் விசாரணை மேற்கொள்ளபடும் என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.மேலும் 2000 நோட்டுகளை வாங்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்ட உள்ளதாக வெளியானதை மேற்கோள் காட்டியவர் முற்றிலும் தவறான செய்தி இதுபோல எந்த ஒரு சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.