சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று தொடங்கிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்றது.
பல்வேறு கட்சியினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து ஏராளமான கேள்விகளை கேட்ட நிலையில் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார்.
போராட்டங்களுக்கு முன் அனுமதி வாங்கப்பட வேண்டும்; திடீரென்று அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறும்போது வழக்கு போடப்படுகிறது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது – பாமகவினர் கைது குறித்து ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னையில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம்; ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு எம்.எல்.ஏ. பேசியுள்ளார் . பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று நியாயம் பெற்றுத் தருவதே அரசின் நோக்கம்
பாஜக கதையை எல்லாம் சொல்லி இந்த அவையின் மாண்பை குறைக்க நான் விரும்பவில்லை . கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல; திமுக ஆதரவாளர் மட்டுமே; திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை; திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம்.
Also Read : இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்..!!
கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளி இருப்பது தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி.. மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. அது யாராக இருந்தாலும் சரி.. அவங்க மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். இதில் மாற்றம் கிடையாது.
மனசாட்சி இன்றி பெண்களின் பாதுகாவலர்கள் போல் பேசுகிறவர்கள் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். அந்த சம்பவத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
சிபிஐ விசாரணைக்கு பிறகே அந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளியாகின . அந்த சம்பவத்தில் தொடர்ச்சியாக பல பெண்களுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை நடந்தது . பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.