புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் முழுவதும் உள்ளகன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை செய்கு பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு விழா விழா இன்று நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கந்தூரி விழாவையொட்டி மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக வருகிற 26 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், 12ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கன்னியாகுமரியில் தலைமை கருவூலம் மற்றும் கிளை அலுவலகங்களில் அரசு சார்ந்த அவசர பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை தேவையான பணியாளர்களை கொண்டு செயல்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.