பொங்கல் ( Pongal Gift ) தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னை மக்கள் 30 ஆயிரம் பேருக்கு கலாநிதி வீராசாமி ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது . இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/stay-updated-with-the-latest-news-on-ayalaans-trailer-release-from-the-film-team/
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி :
பொங்கல் ( Pongal Gift ) தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன் . அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளோம் என்று பிரதமர் சொல்கிறாரே என்ற கேள்விக்கு :
நிதி விஷயத்தில் விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை நிதியமைச்சர் சொன்னதற்கு ஏற்கனவே விளக்கம் சொல்லிவிட்டேன் மழை பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நேரில் பார்வையிட்டு இருக்கிறார் தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவார்கள் என்று நம்புகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.