மதுரை அரசுப் பள்ளி ஒன்றிற்கு ஏற்கனவே 7.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தானமாக வழங்கிய pooranam ammal தற்போது 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை மீண்டும் தனமாக வழங்கி உள்ளார் .
ஆயி பூரணம் அம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 7.5 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை தனமாக வழங்கினார் .
தினம் தினம் விலைவாசி ஏறுவதை பார்த்தல் தனக்கென 1 சென்ட் நிலமாவது வாங்கிற முடியாத என்று ஏங்கி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் தனது 1.5 ஏக்கர் நிலத்தில் இந்தியாவின் வருங்காலமான மாணவர்கள் படிப்பிற்காக ஆயி எனும் பூரணம் அம்மாள் தனமாக வழங்கிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நடுநிலைப் பள்ளியாக உள்ள இந்த அரசுப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு இந்த நிலத்தை கொடுத்துள்ளேன் என்று கூறிய அந்த மூதாட்டி .
தனது இடத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் பதிவு செய்து கொடுத்து உள்ளார்.
மாணவர்கள் பதிர்ப்பாக உதவிய இந்த மூதாட்டிக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த நிலையில்
மதுரை எம்.பி வெங்கடேசன் உள்பட அமைச்சர் பலரும் அவரை நேரில் சென்று வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்தனர்.
இதையடுத்து பூரணம் அம்மாளின் செயலை பாராட்டி தமிழக முதல்வரால் அரசு சார்பில் அவருக்கு கவுரவ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது .
இந்நிலையில் தற்போது தனக்கு சொந்தமான 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை மீண்டும் மாணவர்களின் கல்விக்காக தனமாக வழங்கி உள்ளார் ஆயி பூரணம் அம்மாள்.
Also Read : https://itamiltv.com/lal-salam-trailer-viral-now/
இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது.
இந்த உலகில் நிறைய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை மீண்டும் கொண்டாட வேண்டிய நேரம் இது pooranam ammal செயல் எக்காலத்திற்கும் போற்றப்படும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.