ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொலைக்காட்சி தொடரில் நடித்த, நடிகை ரேஷ்மா முரளிதரன் தனது திருமண தேதியை அறிவித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’பூவே பூச்சூடவா’ தொடரின் மூலம் பல ரசிகர்களை தனதாக்கிக் கொண்டவர் சக்தி கதாபாத்திரத்தில் நடித்த ரேஷ்மா முரளிதரன்.
அதே தொலைக்காட்சி தொடரில் ரேஷ்மா முரளிதரனின் கணவரின் தம்பியாக நடித்தவர் தான் மதன் பாண்டியன். காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களையும் பிரச்சனையையும் சொல்லும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ரேஷ்மா மற்றும் மதன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் நவம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக ரேஷ்மா முரளிதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண அழைப்பிதழை வெளியிட்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.