தென்னிந்திய சினிமா உலகின் பிரபல நடிகர் சரத் பாபு (sarath babu) உடல் நலக்குறைவால் ஐதாராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சரத் பாபு (sarath babu) 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். சுமார் 40 ஆண்டு காலமாக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரத் பாபு . ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
சரத் பாபு தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடா, இந்தி , மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மட்டும் இன்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள இவர் சமீபத்தில், பாபிசிம்ஹா நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், சரத்பாபு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் உடல் நலம் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலம் தேறியதையடுத்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில், அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள பிரபல ஏஐஜி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரத் பாபுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சரத் பாபுவின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சரத் பாபு விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.