kashmir ஒரு காலத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர் தற்போது பிரதமரை பாராட்டுவதாக ஷெஹ்லா ரஷீத் ஷோரா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ‘எழுச்சி பெறும் பாரதம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெஹ்லா ரஷீத் ஷோரா பொது மக்களிடம் உரையாற்றினார்.
இதையும் படிங்க: சக்தி-க்கு புதுவிளக்கம் சொன்ன ராகுல்! – இது எப்படி இருக்கு?
அப்போது பேசிய அவர்,” “நான் ஒரு போதும் மாறவில்லை. ஆனால் தற்பொழுது காஷ்மீரில்kashmir நிலைமை மாறியுள்ளதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் கள நிலவரத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் காஷ்மீரில் நடந்த பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் மக்களின் அணிவகுத்து நின்றனர் என்பதை பார்த்து வியந்தோம்.
தனக்கு பாஜக ஆட்சியை புகழ்ந்து பேசுவது நோக்கமல்ல. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து பிரதமரின் பெயரை உச்சரிப்பதாக நான் கூறவில்லை. ஆனால் மக்கள் இப்போது அரசிடம் புகார்களை எழுப்புகின்றனர்.
தற்பொழுது மக்கள் அரசிடம் எழுப்பப்படும் பிரச்சினைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள தாக அவர் சுட்டிக் காட்டினார்.தொடர்ந்து காஷ்மீரில் மின்வெட்டு, சாலைகள், மின்சாரம் போன்றவை தான் பிரச்சினையாக எழுப்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஷெஹ்லா ரஷீத் ஷோரா காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.