புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படும் என்று குடியரசுத்த் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியப்ப் பிரதமர் நரேந்திர மோடி 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தைத்த் திறந்து வைப்பதற்குக்க் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்க்கு அழைப்பு விடுக்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தலித் மற்றும் பழங்குடியினர் சேர்ந்த ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது அரசியல் காரணத்தினால் மட்டுமே என பாஜக கட்சியின் நடவடிக்கைகள் காட்டுகின்றன எனக்க் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காததைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நேற்று திறப்பு விழாவைப் புறக்கணித்தனர்.இதனையடுத்து, பிரதமர் மோடிக்குக்க் குடியரசுத்த் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்குத் திரௌபதி முர்மு வாழ்த்து செய்தியை மாநிலங்களவை துணைத் தலைவர் வாசித்தார். அதில் புதிய நாடாளுமன்றம் ஒற்றுமை மற்றும் வளத்தை மேம்படுத்தும் என்றும் இது இந்திய ஜனநாயகத்தின் மைல்கள் என்று தெரிவித்த அவர்,இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்தது மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் நாடாளுமன்றம் நடத்தப்படுவதாக அரசியல் அமைப்பு சொல்வதாகவும், அப்படி நாடாளுமன்ற அடையாளமாக இருக்கும் பிரதமர் நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்தது மகிழ்ச்சி எனத்த் தெரிவித்துள்ளார்