Prime Minister Modi is going to Russia : ரஷியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷியா பயணம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க : மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! – எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
பிரதமர் மோடியின் இந்த அரசுமுறை பயணம் வருகிற 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது (Prime Minister Modi is going to Russia).
8 மற்றும் 9-ம் தேதிகளில் மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா – ரஷியா இடையிலான ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அத்துடன், மாஸ்கோ மற்றும் வியன்னாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இறுதியாக ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்கிறார்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரிய நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.