தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்கு ஜனவரி 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.
விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.