கோவை சிறையில் சிறைக்கைதி ஒருவர் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.ருப்பூர் மாவட்டம வெள்ளக்கோவிலை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38).இவர் வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த சக்திவேலை கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சக்திவேல் ஜெயிலில் உள்ள 9-வது பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று மாலை இவர் வழக்கம் போல உணவு சாப்பிட்டு விட்டு சென்றார்.
சிறைக்குள் இருந்த சக்திவேல் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஜெயில் கதவு இரும்பு கம்பியில் தனது லுங்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயில் கைது சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.