தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான (Projects started) திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அந்தவகையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்புடன் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தார்.
இதையடுத்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.
பின்னர் சுமார் 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
திட்டங்களை தொடங்கி வைத்தபின் மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது :
இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்வு. தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம்.
75 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களாக மாற்றும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது.
Also Read This : https://itamiltv.com/tamil-fighter-pilot-featured-in-gaganyaan-project/
மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில் தலைசிறந்து விளங்குகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது.
உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய அரசின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 2,000 கி.மீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன; 5 வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன.
Also Read This : https://itamiltv.com/rip-santhan-santhan-passed-away-due-to-ill-health/
நான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகளின் சித்தாந்தமே தவிர, எனது தனிப்பட்ட கருத்துகள் கிடையாது.
தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், வளர்ச்சி குறித்த எனது கோட்பாட்டையும், செய்தித்தாள்களில் தமிழ்நாடு அரசு வெளியிடவிடுவதில்லை.
தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டிற்கான (Projects started) வளர்ச்சி திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.