முன்னாள் தடகள வீராங்கனையான PT உஷா அவர்கள் ராஜ சபாவை வழிநடத்தக்கூடிய காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இன்றைய காலத்து ஆண்கள் ஓட்டபந்தையம் நடத்தினால் கூட .. நம் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை இவங்க பெரிய PT பாரு என்று தான் எடுத்துக்காட்டாய் சொல்லுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்றளவிலும் எல்லா விளையாட்டு வீரர்களுக்கு மத்தியிலும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் பெயர் தான் பிடி உஷா.வரலாற்றுப் புத்தகத்தில் மாறாத பெயராக பதிந்து இருப்பது இவருடைய பெயர் தான்.
1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் “இந்தியத் தட களங்களின் அரசி”எனக் குறிப்பிடப்படுகிறார்
இந்த நிலையில் கேரள மாநிலம் முன்னாள் தடங்கள வீராங்கனை PT உஷா அவர்களது வயது 59.கடந்த கடந்த ஆண்டு ஜூலை மாதம் MPயாகவும், நவம்பர் மாதம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார் pt உஷா.
இந்த நிலையில் 9 ஆம் தேதி துணை ஜனாதிபதியும் ராஜ சபாவின் தலைவருமான ஜெகதீப் தக்கர் அவர்கள் விடுமுறை எடுத்ததால் ராஜ சபாவைத் தற்காலிகமாகப் pt உஷா அவர்கள் எடுத்து நடத்தினார்.
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.