2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அட்டை அட்டவணையை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி 2024 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 29-ம் தேதி வரை 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 10-ல் வெளியிடப்படும்.

11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வு 2024 மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி நிறைவு பெறும். மே 14-ந்தேதி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 1-ந்தேதி தொடங்கி மார்ச் 22-ந்தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும். மே 6-ம் தேதி பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும்.