புதுச்சேரிமாநிலத்தில்(puducherry) சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்தத சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில்(puducherry) அரசு பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு பகுதியில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சாலையில் குடிநீர் குழாய்கள் அதிக அளவில் இறக்கி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த குடிநீர் குழாய் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் துணையுடன் குடிநீர் குழாய் அருகே இருந்த மணலை அள்ளித் தூவி தீயை கட்டுப்படுத்தினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.