Lord of Sivanmalai’s order box! : சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இன்று முதல் வேல் வைத்து பூஜை செய்விக்கப்படுகிறது. 2019 மார்ச் 4 ஆம் தேதி முதல் இன்று 2024 ஏப்ரல் 2024 ஆம் தேதி வரை வேல் 5 ஆம் முறையாக உத்தரவு ஆகியுள்ளது.
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்தக் கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக,
சிவன்மலை முருகன் கோவிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்வது வழக்கம். பின்னா் அந்தப் பொருளை கோவில் மூலவா் அறைக்கு முன்பாக, கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.
இதையும் படிங்க : அருண் விஜய்யின் ரெட்ட தல…. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
இந்த கண்ணாடி பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.
முருகனிடம் உள்ள வேல் அதர்மத்தையும், தீமையும் அழிக்கும் சக்தி கொண்டது. இப்போது வேல் வைக்கப்பட்டதால், நாட்டில் அதர்மமும், தீமையும் அழிக்கப்படும்.
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் முருகா சரணம் Lord of Sivanmalai’s order box!.
இதையும் படிங்க : ED விசாரணை கோரிய மனு தள்ளுபடி