புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடப்பட்ட கோர தாக்குதல் நடைபெற்று (Pulwama attack) இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இன்று பொதுமக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிப் 14 ஆம் தேதி இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இந்நாள் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். படைக்குச் சொந்தமான வாகனத்தில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கோர தாக்குதல் தான் .
நம் பாரத நாட்டின் உயிர் நாடியான நமது சி.ஆர்.பி.எப். வீரர்கள் புல்வாமாவில் ஒரு சாலையில் பாதுகாப்பு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த வாகனம் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தில் வந்து மோதியது.
பாகிஸ்தான் தீவிரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப் படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் உடல்சிதறி வீரமரணம் அடைந்தனர்.
காதலர் தினத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோக கடலில் மூழ்கடித்தது .
இந்த தாக்குதல் இந்தியாவில் உள்ள அனைவரது மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .
இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து இதற்கு தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியது .
பின்னர் இந்திய ராணுவம் நடத்திய என்கவுண்டரில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஷீத்காசி என்பவனையும் சுட்டுக்கொன்றனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் அச்சுறுத்தலை கண்டறிந்து பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராதவாறு காக்கும்
நமது முப்படை வீரர்களுக்கு இன்றுமற்றும் இல்லாமல் எப்போதும் மரியாதை செலுத்த வேண்டியது நம் கடமை.
Also Read : https://itamiltv.com/ias-ips-officers-pay-respect-to-vetri-duraisamy/
தன்னுயிர் கொடுத்து மக்கள் (Pulwama attack) உயிரை காப்பாற்றும் நம் வீரர்களுக்கு எப்போதும் வீரவணக்கத்தை கம்பீரமாக செலுத்துவோம்.
இந்நிலையில் இந்த துயரம் சம்பவம் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்றும் நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அந்த மாவீரர்களை நாடும், நாமும் போற்றுவோம் ஜெய் ஹிந்த்.