திருச்சியில் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு – திடீர் போராட்டத்தால் பரபரப்பு!!

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 39 – வது நாளான இன்று வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததை கண்டித்து, மத்திய, மாநில அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை வலியுறுத்தி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வெண்டைக்காய் மாலை அணிவிக்க முயற்சி செய்ததால் காவல்துறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சாலைகளில் வெண்டைக்காயை கொட்டி போராட்டத்தில் ஈடுபடுதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அண்ணா சிலையின் மீது வெண்டைக்காயை தூக்கி எறிந்து போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசுகையில்..

தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் முன்னிறுத்திய கோரிக்கையின் மீது மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வெண்டக்காயின் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது வலியுறுத்தும் வகையில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் வாக்குவாதம், தள்ளு முள்ளு நடத்தினர், இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருக்கு போராட்டம் தொடரும்.

உடனடியாக மாநில அரசு மற்றும் மத்திய அரசு விவசாயிகளின் நலனை சார்ந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அங்கு விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Total
0
Shares
Related Posts