செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் வழக்கத்திற்கு மாறாக கொளுத்தியது. இதன் காரணமாக பள்ளிகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. இதனால் தற்போது சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிவடைய உள்ள நிலையில், காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் 2வது வாரத்தில் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் கேஜி வகுப்புகளுக்கு இப்போதே காலாண்டு தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் மற்ற வகுப்புக்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் படி 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதியும், 11, 12 ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதியும் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நிறைவடைந்த பின், 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு அக்டோபர் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
அதன் படி 1-3ம் வகுப்புகளுக்கு செப்.23 – அக்.2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல் 4- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.28 – அக்.2 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டு அக்.3ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.