அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கப் பிரிவு அருகே தீவிர இனவெறி பாகுபாடுகள் அரங்கேறுவதாக பழங்குடியினர் அமைப்பு ஒன்று அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையத்திடம் பரபரப்புப் புகார் அளித்துள்ளது.
அதில், பல ஆண்டுகளாக பாகுபாடு மற்றும் அவதூறுகளை அனுபவித்து வரும் நாங்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று பழங்குடியினர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நிலக்கரிச் சுரங்கத்திற்கு அருகில் உள்ள நீரூற்றுகளை அணுக விடாமல் அங்கு வசிக்கும் பழங்குடியினரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் அதானி ஊழியர்கள் துன்பப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.