Site icon ITamilTv

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை: 2015 மீண்டும் திரும்புகிறதா? – எச்சரிக்கும் வெதர்மேன்கள்

Spread the love

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையோடு விடாமல், சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளதால், சென்னை வாழ் மக்கள் மத்திய கடும் அச்சம் எழுந்துள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் நகரம் முழுவதும் பிரதான சாலைகள்  முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 2015-க்கு பிறகு அதிக அளவு கனமழை பதிவாகியிருப்பதால் சென்னைவாசிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து குளங்களாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கோயம்பேடு,திருமங்கலம், அண்ணாநகர், அம்பத்தூர் புதூர், வியாசர்பாடியருகே உள்ள கணேசபுரம், பிராட்வே, வடபழனி, நுங்கம்பாக்கம், தி நகர், போரூர், வளசரவாக்கம், அண்ணாசாலை, கோடம்பாக்கம், , குரோம்பேட்டை மாம்பலம், மைலாப்பூர் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் மிக கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான பிராட்வே,வண்ணாரப்பேட்டை, மண்ணடி,வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. சென்னை மண்ணடியில் மழைநீரோடு, பாதாள சாக்கடையும் கலந்து ஓடுவதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சென்னை முக்கிய நகரங்களில் பெய்த மழையால் வெள்ளநீர் சூழ்ந்து போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மழைநீர் தண்டவாளத்தில் சூழ்ந்துள்ளதால் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் மாநகர பேருந்து சேவையும் பெரும்பாலான இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வடசென்னை பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் மழைநீர் சூழ்ந்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த 2015ம் ஆண்டுக்குப்பின் சென்னையில் அதிகபட்சமாக  நேற்றிரவு பெய்த மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய சென்னைப்பகுதியை நோக்கி மேகமூட்டங்கள் நகர்ந்து வருவதால் மழை தொடரும் எனவும் வெதர்மேன்கள் எச்சரித்துள்ளனர்.

இன்று காலை 7.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் 207மிமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் ேததி 294 மி.மீ மழைபதிவாகியிருந்தது. அதற்கு பிறகு, அதிகபட்ச மழை நேற்றிரவு பதிவாகியுள்ளது.

மேலும் மைலாப்பூரில் 226 மி.மீட்டர் மழையும், அம்பத்தூரில் 205 மி.மீட்டரும் பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் 200 மி.மீ மழையைக் கடந்துள்ளது. 2015 க்கு பின் நேற்றிரவுமுதல் அதிகபட்சமாக கனமழை சென்னையில் அதிக கனமழை பெய்த்து மட்டுமின்றி, ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்திருப்பது சென்னை மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version