நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதாக ராகுல் காந்தி(rahul gandhi) எம்பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தனது கருத்தை தெரித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு அரசியலிலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பெண்களுக்கு பிரதிநித்துவம் வழங்க வேண்டும். பெண்களுக்கான பிரதிநித்துவம் அதிகமாக வழங்கும்போது சமூகத்திலும், அவர்களுக்கான அடிப்படை உரிமையும் அங்கிகாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் மசோதா முழுமையற்றதாக உள்ளது என்றார்.மகளிர் இட ஒதுக்கீடு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார்.