மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம் -போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Rail-strike-condemning-the-Union-government
Rail strike condemning the Union government

மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் இன்று அதிகாலை ரயில் மறியல் நடைபெற்றது.
மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்து, தொழிலாளர்களுக்கு எதிரான விரோத சட்டங்களை திரும்பப் பெறு, விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை வாபஸ் பெறு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

Rail-strike-condemning-the-Union-government
Rail strike condemning the Union government

இந்நிலையில் தண்டவாளங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்வதை பார்த்த ஓட்டுனர் சற்று முன்பே ரயிலை நிறுத்தினார்.
இத அடுத்து காவல் துறையினர் அனைவரையும் தண்டவாளத்தை விட்டு நடைமேடைக்கு ஏற்றினர். ஆனால் தொடர்ந்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Total
0
Shares
Related Posts