நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – கால அவகாசத்தை நீடித்தது உச்சநீதிமன்றம்

elections-in-tamil-nadu-supreme-court-order
elections in tamil nadu supreme court order

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் 4 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மனு அளித்திருந்தது.
இந்த  மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் சொல்லும் காரணங்கள் ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை என்றும், தேர்தலை உடனடியாக நடத்த கோரிய மனுதாரர், தற்போது அவகாசம் கேட்பது ஏன்?’ என்றும்  கேள்வி எழுப்பினர்.

elections-in-tamil-nadu-supreme-court-order
elections in tamil nadu supreme court order

இறுதியில் மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்றுகொண்ட உச்சநீதிமன்றம் 4 மாத காலம் அவகாசம் வழங்கியது. இதை அடுத்து ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Total
0
Shares
Related Posts