இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை, தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிட்ட நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ‘தேஜ்’ புயல் நேற்று காலை அதி தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24ஆம் தேதியன்று அன்று tha தமிகத் தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை, தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகள், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.