நள்ளிரவில் பெய்த மழை தண்ணீரில் தத்தளித்த வீடுகள்

rains-Namakkal-district-at-midnight
rains lash Namakkal district at midnight

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.பள்ளிபாளையத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் வடிகால்களில் அடைப்புகளில் மழைநீர் தேங்கியதோடு, சாலையோர கடைகள், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.

rains-Namakkal-district-at-midnight
rains Namakkal district at midnight

மேலும் திருச்செங்கோடு பகுதியில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்.

Total
0
Shares
Related Posts