அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; வெளியூர் செல்லக்கூடாது; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவும் நீதிமன்றம் நிபந்தனை வழங்கியுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் அளித்து உத்தரவிட்டனர். ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார் வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.