மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
கொரோனா வைரஸ் குறைவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 60,405 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,55,319 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 1989, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும், 1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 முறை மதுரை எம்.பி.யாக இருந்தவர். 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் போட்டியிடவில்லை.