Ayodhya Ram Temple-அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவோம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமர் கோயில் திறப்பு விழா :
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி கருவறையில் நிறுவ உள்ளார். பிற்பகல் 12.20 மணி தொடங்கி 1 மணிக்குள் இந்த ராமர் கோயில் திறப்பானது நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்க அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி அனைவரின் வீடுகளிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவோம் என
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க :Ram Mandir-ஜிப்மர் மருத்துவமனை ஜன.22-ல் இயங்காது!
இதனை தொடர்ந்து ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு பல மாநிலங்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் யாகங்கள், ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அயோத்தி ராமர் கோயில்(Ayodhya Ram Temple) பிராண பிரதிஷ்டை விழா நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்கள்அனைவரும் குழந்தை ராமரைவரவேற்று தரிசிக்கத் தயாராகிவருகின்றனர்.
மடாதிபதிகளும்பல ஆன்மிக பெரியோர்களும்ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749294746353471848?s=20
ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும்.
குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.500 ஆண்டுக்கால இந்துக்களின் எழுச்சி போராட்டத்துக்குப் பிறகு இந்த தீர்வு கிடைத்துள்ளது.
அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த ஆன்மிக எழுச்சி தினத்தை உள்ளுணர்வோடு ஒன்றுபட்டு அனைவர் வீடுகளிலும் மாலை கார்த்திகை தீபம்போல் அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளி வெள்ளத்துடன், ராமரைப் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.