தமிழகத்தில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை இது வரை பெறாதவர்கள் இன்று முதல் ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் கரும்பு, பச்சரிசி, வெல்லம், மஞ்சள் தூள் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பை முதலமைசசர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ரந்து தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் பொங்கல் சிறப்புத் தொகுப்பை இது வரை பெறாதவர்கள் இன்று முதல் ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 16ம் தேதி தமிழக நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வரவேண்டிய, நிலுவையுள்ள கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தெரிவித்திருந்தது. இதனால் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேசன் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன.
இன்று ஜனவரி 17ம் தேதி காலை 7 மணி முதல் ரேஷன் கடைகள் திறந்து செயல்படும். இதுவரை பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறாத தகுதியுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இன்று காலை 7 மணி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசு தொகுப்பை இது வரை வாங்க முடியாதவர்கள் இம்மாதம் 31ம் தேதி வரையில் வாங்கி கொள்ளலாம் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.